http://www.thiripurasundariammantemple.thirukalukundram.in/

சிவமயம்
Arulmigu Thiripura Sundari Amman Temple - Thirukazhukundram,Pakshi Theertham
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்.
http://www.thiripurasundariammantemple.thirukalukundram.in/

Thirukazhukundram Arulmigu Shri Thiripura Sundari Amman Temple, Thirukalukundram

     Thirukalukundram Thiripurasundari Amman Temple Lies 14 Kilometer to South east of the town Chengalpattu,and 70 Kilometer from Chennai. Thirukalukundram Temple God Name is Shree Vedhagiriswarar and Amman name is Shree Thiripurasundari Amman,God Vedhagiriswarar and Thiripurasundari Amman is a swayambu in this Tirukazhukundram temple. Thirukalukundram Arulmigu thiripurasundari Amman is the one of the famous amman temple in tamilnadu. Thiripura sundari Amman is Ashta gantha and with made of eight kinds of perfume, Only three days (Aadi Uthiram,Navarathiri Navami, Panguni Uthiram )are anointed for thiripurasundari Amman, On the other days, the anointing will be done only to the Thiripurasundari Amman's foot. Every Year Aadi Thiruvizha (Bramorchavam) is celebrated 10 days in Arulmigu Tiripurasundhari Amman during Aadi Month. In this thiripurasundari Amman Aadi Thiruvizha (Bramorchavam) Day 1 Early morning kodiyetram, Thiruvizha Day2 night Alangara Vimanam, Day 3 Morning Athikara Nanthi,Thiruvizha Day 4 Night Naga Vaganam,Thiruvizha Day 5 Night Rishaba Vaganam,Thiruvizha Day 6 night Yanai Vaganam, Day 7 Morning Ther(Ratham) is important one..


அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம்

      திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் செங்கல்பட்டு நகரின் தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. திருக்கழுக்குன்றம் திருக்கோவிலில் இறைவன் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர், இறைவியின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் என்பதாகும் இங்கு திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார்..திரிபுரசுந்தரி அம்மன் அஷ்ட காந்தம் மற்றும் எட்டு விதமான வாசனை மூலிகைகளால் உருவாக்கப்பட்டு மங்களங்கள் அருளும் அன்னையாய் திரிபுரசுந்தரி அம்மன் வீற்றிருக்கிறாள் . திரிபுரசுந்தரி அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவமாதலால் அம்மனுக்கு ஆடி உத்திரம் நட்சத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் பங்குனி உத்திரம் நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே முழு அபிஷேகம் நடைபெறும்.மற்ற நாட்களில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருப்பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். திரிபுரசுந்தரியை அம்மனை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லவை நடக்கும்.

      திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மனுக்கு வருடம் தோறும் ஆடி மாதத்தில் 10 நாள் ஆடி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி திருவிழாவின் போது ஸ்ரீ விநாயகர் முன் செல்ல அன்னை திரிபுரசுந்தரி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஆடி திருவிழாவின் முதல் நாள் அதிகாலை கொடியேற்றம்,இரண்டாம் நாள் இரவு அலங்கார விமானம்,மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி,நான்காம் நாள் இரவு நாக வாகனம்,ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகனம், ஆறாம் நாள் இரவு யானை வாகனம், ஏழாம் நாள் காலை தேர் ஆகிய திருவிழாக்கள் சிறப்பானதாகும்.



Web Designed And Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved


This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees